×

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட்.26ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தலைமன்னார் தனுஷ்கோடி இடையே மீன்பிடித்தபோது, 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 8 மீனவர்களையும் சிறைபிடித்து மன்னார் நீதிமன்றத்தில் இலங்கை கடற்படை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.

செப்டம்பர்.5ஆம் தேதி சிறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 மீனவர்களுக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்திருந்தது. ரூ.50,000 அபராத தொகையை கட்டிய மீனவர்களில் 5 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். 3 மீனவர்கள் 2ஆவது முறையாக சிறைபிடிக்கப்பட்டதால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை மன்னார் நீதிமன்றம் விதித்தது. இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

மீனவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மொட்டை அடித்து அனுப்பியதால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Sri Lankan government ,Nadu ,RAMESWARAM ,Rameshwar ,Dhanushkodi ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED இலங்கை அரசை கண்டித்து பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்