×

சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 22% உயர்த்தியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி கடுமையாக உயர்ந்துள்ளது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியது. சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5%லிருந்து 27.5%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி உயர்வு இன்று முதலே அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரி ஒரே நாளில் 20% உயர்த்தப்பட்டதால் வணிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 22% உயர்த்தியது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Delhi ,Dinakaran ,
× RELATED ஜிஎன்எஸ்எஸ் மூலம் தனியார்...