×

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அச்சமயம் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். சக் தாப்பர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் சிக்கி மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து பிங்னல் துகாடா வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் விபன் குமார், அரவிந்த் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

The post காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : KASHMIR ,Jammu and ,CHAK TAPPER CREERI BATON ,PARAMULLAH DISTRICT ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை