இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா

கொழும்பு: கிழக்கு இலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் 9வது நாள் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக காலை 9.30 மணிக்கு பாற்குட பவனி நடைபெற்றது. வீரமுனை ஆண்டியர் சந்தியில் அமைந்துள்ள முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, ஸ்ரீ சிந்தா யாத்திரை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து பெண்கள் பாற்குடம் எடுத்து வந்து எம்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.

× RELATED துபாயில் தமிழக எப்.எம்...