×

பெரம்பலூரில் குறைகள் தீர்க்கும் கூட்டுறவு பணியாளர் நாள்

 

பெரம்பலூர், செப்.14: பெரம்பலூர் இணைப்பதிவாளர் கூட்ட அரங்கில் கூட்டுறவு துறையின் கீழே இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் பொருட்டு இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் மாதத்தில் 2 வது வெள்ளிக்கிழமையன்று பணியாளர் நாள் நடத்தப்படும் என கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர், சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தொடர்ந்து பெரம்பலூர் மண்டலத்தில்கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரையின் படி, இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 வது வெள்ளிக்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைகள் தீர்க்கும் பணியாளர் நாள் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் அரசு தலைமையில் மனுக்கள் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் சரக துணைப்பதிவாளர் இளஞ்செல்வி மற்றும் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சிவகுமார், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மணிசபரீஷ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் குறைகள் தீர்க்கும் கூட்டுறவு பணியாளர் நாள் appeared first on Dinakaran.

Tags : Grievance Redressal Workers Day ,Perambalur ,Grievance Redressal Cooperative Employees Day ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை...