×

வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

 

திருப்பூர், செப். 14: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. செல்வராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். திருப்பூர் வடக்கு மாவட்டம்,மாநகர,ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியின் கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி, மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் உமாமகேஸ்வரி,மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி, மாலதி நாகராஜ்மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Rani ,North District DMK Office ,Tirupur ,Tirupur North District DMK ,Selvaraj MLA ,Tirupur North District ,Union ,Perur Kazhagam ,Women's Team ,Dinakaran ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டாவிற்கு நிலம்...