×

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

மதுரை: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, எம்.ஆர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்குமார்(34). இவரது மனைவி சுமதி (30). இவர் திருப்பரங்குன்றத்தில் அஞ்சலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சுமதி பணியிலிருந்தபோது, அவரது உயரதிகாரி ஒருவர் வேலை சம்பந்தமாக அவரை குறை கூறியதுடன், மிரட்டி விளக்க கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த சுமதி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vignesh Kumar ,D. Kallupatti, MR ,Madurai district ,Sumathi ,Tiruparangundram ,
× RELATED மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள...