×

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி

உடுமலை:கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அடூர் திருக்காபரம்பில் பகுதியை சேர்ந்தவர் ஷிஜித் (41). இவர் தனது மகள் அஸ்வதி (25), மகன்கள் கௌதம் ஜித் (9), திருகை ஜித் (4), உறவினர் ரமணி (75) ஆகியோருடன் ஒரு காரில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று மதியம் 2.30 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது வேகத்தடை ஒன்றில் கார் ஏறி இறங்கியதில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது.

அதன்பின்னர் சாலையோரம் இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தவர் மீது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த மோகன்ராஜ் (52), ராஜகோபால் (50), பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்த ரங்கசாமி (68), ஆகியோர் உயிரிழந்தனர். காரில் பயணித்த 2 பெண்கள் உள்பட 6 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

The post பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Shijith ,Adur Thirukkaparambhil ,Thrissur district, Kerala ,Aswati ,Gautham Jit ,Thirukai Jit ,Ramani ,Palani ,
× RELATED உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை