×

இங்கி. தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றிய ரஷ்யா

மாஸ்கோ: மாஸ்கோவில் இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் 6 பேரின் அங்கீகாரத்தை ரஷ்ய அரசு ரத்து செய்துள்ளது. இவர்கள் இங்கிலாந்தின் வௌியுறவு துறை அலுவலகத்தின் ஒரு பிரிவினால் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவர்களின் நடவடிக்கைகள் உளவு பார்த்தல் மற்றும் நாசவேலையின் அறிகுறிகளை காட்டுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து 6 தூதரக அதிகாரிகளும் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவும், இங்கிலாந்தும் உக்ரைனுக்கு கூடுதல் உதவி செய்வதாக அறிவித்த இரண்டு நாட்களுக்கு பின் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

The post இங்கி. தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றிய ரஷ்யா appeared first on Dinakaran.

Tags : Moscow ,Russian government ,Russia ,British Foreign Office ,
× RELATED உக்ரைனுடன் இணைந்து போரிட்ட...