- குவாட் உச்சி மாநாடு
- அமெரிக்கா
- பிரதமர் மோடி
- வாஷிங்டன்
- அமெரிக்கா
- இந்தியா
- ஜப்பான்
- ஆஸ்திரேலியா
- எங்களுக்கு
- ஜனாதிபதி பிடன்
- குவாட்' மாநாடு
- ஐ.நா. பொதுச் சபை
- நியூயார்க்
- 21வது குவாட் உச்சி மாநாடு
- மோடி
- தின மலர்
வாஷிங்டன்: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்து குவாட் அமைப்பை உருவாக் கின. குவாட் அமைப்பை உருவானதில் அமெரிக்க அதிபர் பைடனின் பங்கு முக்கியமானதாகும். இந்த ஆண்டு இந்தியாவில் குவாட் மாநாடு நடைபெறவிருந்தது. நியூயார்க்கில் உள்ள ஐநா பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் செல்வதை ஒட்டி மாநாடு மாற்றப்பட்டது.அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறுகையில்,‘‘அமெரிக்க அதிபர் பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டன்னில் 21ம் தேதி குவாட் உச்சி மாநாட்டை கூட்டி உள்ளார். உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்,இந்திய பிரதமர் மோடி,ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.
The post 21ம் தேதி அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.