×

சென்னையில் 24ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சமீப காலமாக பல்வேறு பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய பாலியல் வன்கொடுமைகளை தடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி சார்பில் செப்.24ம் தேதி காலை 9.30 மணியளவில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும். இதில், மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 24ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary-General ,Edappadi Palanisami ,Tamil Nadu ,Aimuga Demonstration ,24th ,
× RELATED தமிழ்நாட்டில் 10 சதவீத வாக்குகளை...