×

தாளவாடி மலைப்பகுதியில் காரை வழிமறித்து துரத்திய காட்டு யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் காரை வழிமறித்து துரத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கும்டாபுரம் அருகே அவ்வழியாக வந்த காரை ஒற்றை யானை வழிமறித்து துரத்தியது.

காரை ஓட்டி வந்த டிரைவர் வாகனத்தை பின்நோக்கி இயக்கினார். 1 கி.மீ தூரத்துக்கு காரை துரத்திய யானை பின்னர் தானாக வனத்துக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கும்டாபுரம் சாலையில் உலா வரும் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாளவாடி மலைப்பகுதியில் காரை வழிமறித்து துரத்திய காட்டு யானையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Talawadi hills ,Sathyamangalam ,Talawadi Highlands ,Talawadi Forest ,Sathyamangalam Tigers Archive ,Erode District ,
× RELATED சத்தியமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்