×

ஆலு மஞ்சூரியன்

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 3,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயத்தாள் – சிறிதளவு
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன்,
பச்சரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

மஞ்சூரியன் கிரேவிக்கு:

கறிவேப்பிலை – சிறிது,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:

சின்ன வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி அரைவேக்காடு பதத்துக்கு வேகவைக்கவும்.ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், பச்சரிசி மாவுடன் மிளகுத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாகக் கரைக்கவும்.இந்த மாவில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்துப் புரட்டவும்.அடுத்து வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டி வதக்கவும்.கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.சூப்பரான ஆலு மஞ்சூரியன் ரெடி.

The post ஆலு மஞ்சூரியன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல்