×

‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு


பெரம்பூர்: ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி (67). இவரது மனைவி பாத்திமா பீவி (60). இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் இளைய மகள் இறந்துவிட்டதால் தனது பேத்திக்கு துணையாக வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் ஹவுஸிங் போர்டு பகுதியில் ஜாபர் அலியும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை ஜாபர் அலி தனது மனைவியை ஆசைக்கு இணங்கும்படி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஜாபர் அலி, தான் வைத்திருந்த பிளேடால் மனைவியின் முகம், கையில் சரமாரியாக கிழித்துவிட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்த பாத்திமா பீவியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு முகம் மற்றும் கையில் 14 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து ஜாபர் அலியை தேடி வருகின்றனர்.

The post ‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Jafar Ali ,Viasarpadi Shastri Nagar ,Chennai ,Fatima Biwi ,
× RELATED டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு...