×

3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை : 3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3,000-க்கும் அதிகமான தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன.

பண்டிகை நாள்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாள்களாக இருந்தாலும், வார இறுதி நாள்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர்கதையாகவே இருக்கிறது. அரசுப் பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்பவர்களின் ஒரே வாய்ப்பு தனியார் ஆம்னி பேருந்துகள்தான்.

இந்நிலையில் ஓணம் மற்றும் வர இறுதி நாளை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.4,500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இருந்து நெல்லை செல்ல குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.4,200 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல ரூ.2,500 முதல் ரூ.4,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ.2000 முதல் ரூ.4000 வரை உயர்ந்துள்ளது.

The post 3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை...