×

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.

அமெரிக்கா: தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். அவரின் வருகைக்கு நன்றி தெரிவித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், சிகாகோ விமான நிலையத்தில் பதாகை ஏந்தி வழியனுப்பி வைத்தனர்.

முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். உலகத்தின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வெளிநாடு பயணங்கள் மிக முக்கியமானவை. வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். 17 நாட்கள் நீடித்த அவரது சுற்றுப்பயணத்தில், பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, தமிழகத்தில் தொழில் துவங்க பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இதுவரை, 18 நிறுவனங்கள் உடன் 7,616 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. பயணத்தில் கடைசி நாளான இன்று அதிகாலையில் சிகாகோவில் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் ஓசூரில் தனது கிளையை திறக்க முடிவு செய்திருக்கிறது. இதனையடுத்து தனது அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

The post தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,United States ,Tamil Nadu ,K. Stalin ,Chennai ,USA ,MLA ,Chicago Airport ,Chenna ,
× RELATED அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச்...