×

திருத்துறைப்பூண்டியில் ஆசிரியர் தின சிறப்பு கூட்டம்

 

திருத்துறைப்பூண்டி, செப்.13: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கத்தின் வாராந்திர கூட்டம் ஆசிரியர் தின சிறப்பு கூட்டமாக நடைபெற்றது. தலைவர் பாலு தலைமை வகித்தார். செயலர் ராஜ்நாரயணன் அறிக்கை சமர்பித்தார். தஞ்சாவூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினரும் முன்னாள் உதவி ஆளுநருமான அருண் ஜெபராஜ் பேசினார். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய 7 ஆசிரியர்களுக்கு நேஷனல் பில்டர் அவார்ட் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னால் துணை ஆளுநர்கள் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பொருளாளர் சதாபத்மநாதன் நன்றி கூறினார்.

The post திருத்துறைப்பூண்டியில் ஆசிரியர் தின சிறப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Thirutharapoondi ,Tiruthurapoondi ,Thiruthurapoondi Rotary Society ,Tiruvarur ,Teachers' Day ,President ,Balu ,Rajnarayanan ,Thanjavur Temple City Rotary Association ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்