×

திருவையாறு அருகே புனித அமல் அன்னை ஆண்டு திருவிழா கொடியேற்றம்

 

திருவையாறு, செப். 12: திருவையாறு அடுத்த வயலூர் பங்கு பள்ளியக்ரஹாரத்தில் உள்ள புனித அமல் அன்னை ஆண்டு திருவிழா நேற்று தஞ்சாவூர் இருதய ஆண்டவர் பேராலய அருட்தந்தை பிரபாகர் கொடி ஏற்றிவைத்து புதிதாக கட்டப்பட்ட திப்பலி மேடையை புனிதப்படுத்தி திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார். இதில் பங்கு மக்கள் அனைவரும் கலந்துகொண்டு புனித அமல் அன்னையின் ஆசி பெற்று சென்றனர். தொடர்ந்து தினந்தோறும் மாலை திருப்பலியும், சிறு தேர்பவனியும், நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது.

வரும் 14-ம் தேதி மாலை திருவிழா திருப்பலியும், அன்னதானமும் நடைபெறுகிறது. இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெறுகிறது. தஞ்சாவூர் ஆயர் இல்ல அருட்தந்தை சகாயராஜ் திருப்பலி நிறைவேற்றி தேர்பவனியை தொடங்கி வைக்கி அருளாசி வழங்குகிறார்.15ம் தேதி கொடி இறக்கமும், திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான்போஸ்கோ, உதவி பங்குதந்தை ஷெரில் கியூபர்ட் மற்றும் அருட் சகோதரிகள், பக்தசபைகள், அன்பியங்கள், இளையோர் இயக்கங்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

The post திருவையாறு அருகே புனித அமல் அன்னை ஆண்டு திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : St. ,Amal ,Tiruvaiyar ,Thiruvaiyaru ,St. Amal Annai festival ,Vayalur Pangu Palliyakraharam ,Thanjavur ,Bishop ,Prabhakar ,
× RELATED புனித அல்போன்சா கல்லூரியில் கலை இலக்கிய விழா