×

கோரிக்கை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் போராட்டம்

 

புதுக்கோட்டை, செப்.12: புதுக்கோட்டையில் டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடைநிலை தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோ ஜாக்) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியின்போது அளித்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை வருடங்கள் ஆகியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். முதல் கட்ட போராட்ட துவக்கியுள்ளோம். இதில் அரசு உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அடுத்து கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

The post கோரிக்கை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ditto Jack ,Pudukottai ,District Primary Education Office ,central government ,
× RELATED 342 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆப்சென்ட்