×

அரியானா சட்டப் பேரவைக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு: 4 முனை போட்டி தீவிரம்

சண்டிகர்: அரியானா சட்டப் பேரவைக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அங்கு 4 முனை போட்டி நிலவுகிறது. அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அந்த வகையில் அரியானாவில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், வரும் 16ம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. அரியானாவில் ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியின்றி தனித்து போட்டியிடுகின்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. ஆம்ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. எனவே அரியானாவில் நான்கு முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post அரியானா சட்டப் பேரவைக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு: 4 முனை போட்டி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ariana Legislative Council ,4 Node ,Chandigarh ,Ariana ,Jammu and Kashmir Assembly ,Ariana Legal Council ,Node Competitive Intensity ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி