×

வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!!

சென்னை: ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புகாருக்குள்ளான சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய புகாரில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மற்றும் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Vellore Jail Department ,DIG Rajalakshmi ,CHENNAI ,Vellore ,DGP ,Prisons Department ,Dinakaran ,
× RELATED ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...