×

கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: அரசு மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த உத்தரவிட கோரி வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது. இந்த மனுவில், கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிடப்பட்டு இருந்தது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டமைப்பு உத்தரவை நடைமுறைப்படுத்த எவ்வளவு நாள் ஆகும்? என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை, உத்தரவை அமல்படுத்த எவ்வளவு நாட்களாகும் என்று சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Court ,Icourt Branch ,Dinakaran ,
× RELATED சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை...