×

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்… இன்றைய தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்து வந்தது. அடுத்த ஒரே வாரத்தில் விலை சரிவு நின்று, அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,800ஐ எட்டியது. அதன் பிறகு லேசாக சரிந்தது. அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாக சரிவதும் என இருந்ததால், ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரம் ரூபாயை கடந்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ. 6,680க்கும் விற்று வந்தது. இதனிடையே நேற்று சற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6705-க்கும் சவரன் ரூ.53640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, விலை மாற்றமின்றி ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்… இன்றைய தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Chennai ,South India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...