×

கலெக்டர் தகவல் திருவாரூரில் 2வது நாளாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள்

திருவாரூர், செப். 12: திருவாரூரில் நேற்று 2வது நாளாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை நேற்று முன்தினம் மாவட்ட விளையாட்டரங்கில் கலெக்டர் சாரு துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபாடி, கூடைப்பந்து, வளைகோல்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன.இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதேபோன்று நேற்றும் 2வது நாளாக மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், வாலிபால், கால்பந்து மற்றும் இறகுப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதேபோன்று திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் நூற்றுகணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இன்று கபாடி, கால்பந்து, இறகுப்பந்து (மாணவிகள் மட்டும்) மற்றும் தடகளம் மற்றும் நீச்சல் (மாணவ, மாணவிகள்), நாளை (13ந் தேதி) வாலிபால் (மாணவிகள் மட்டும்), ஹேண்ட்பால் மற்றும் கோ-கோ (மாணவ, மாணவிகள்), நாளை மறுதினம் மாணவர்களுக்கு கேரம் மற்றும் கிரிக்கெட் போட்டியும், 15ந் தேதி மாணவிகளுக்கு கேரம் மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இதேபோன்று கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுதிறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் என மொத்தம் 5 பிரிவுகளில் வரும் 24ந் தேதி வரை போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

The post கலெக்டர் தகவல் திருவாரூரில் 2வது நாளாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Collector Information Chief Minister's Cup Games ,Thiruvarur ,Tiruvarur ,Chief Minister's Cup ,Tamil Nadu Chief Minister's Cup ,Collector Information ,Thiruvarur Chief Minister's Cup Games ,
× RELATED காலடி மூலம் நிலப்பரப்பில் ஏற்படும்...