×

தி.நகர், வியாசர்பாடி கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: வாரியம் தகவல்

சென்னை, செப்.12: மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: தி.நகர் மற்றும் வியாசர்பாடி கோட்டங்களில் நாளை காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. தி.நகர் கோட்டத்திற்கு நுங்கம்பாக்கம், எம்.ஜி.ஆர் சாலை, மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில் உள்ள 110 கி.வோ. வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள தி.நகர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வியாசர்பாடி கோட்டத்திற்கு ராமலிங்கர் கோயில் எதிரில் உள்ள 110/33 கி.வோ வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள வியாசர்பாடி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறும்.

The post தி.நகர், வியாசர்பாடி கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : D. Nagar ,Vyasarpadi ,Chennai ,Electricity Board ,Nungampakkam, MGR Road ,110 KW ,
× RELATED ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும்...