×

அரியானா சட்டபேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் 30 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டபேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகின்றது. ஆத் ஆத்மி சார்பில் ஏற்கனவே மூன்று முறை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை 61 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 30 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது.

ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பாஜவின் யோகேஷ் பாய்ராகிக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் முதல் டபிள்யூடபிள்யூஇ வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரியானா சட்டபேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் 30 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Yes ,Ariana ,New Delhi ,Aad Atmi ,Yes Atmi ,Dinakaran ,
× RELATED 2 மாநில சட்டப்பேரவை தேர்தலில்...