×

பாஜ இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது: ராகுல் காந்தி கருத்துக்கு அமித் ஷா பதிலடி

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்.

நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளார். பாஜ இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜ இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது: ராகுல் காந்தி கருத்துக்கு அமித் ஷா பதிலடி appeared first on Dinakaran.

Tags : Bahja ,Amit Shah ,Rahul Gandhi ,New Delhi ,Union Interior Minister ,Congress party ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து...