×

வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகை

சென்னை: இந்தியா- வங்கதேச அணிகள் இடையே நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதற்காக, இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகின்றனர். வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஞாயிறு மாலை டாக்காவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகின்றனர். இந்தியா- வங்கதேச அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகள் நடக்க உள்ளன. அதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

இதையொட்டி இன்று சென்னை வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சி முகாமில் பங்கேற்கின்றனர். வங்கதேச கிரிக்கெட் அணி, வரும் 15ம் தேதி மாலை 3.15க்கு தனி விமானத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து புறப்பட்டு, சென்னை வந்து சேர்கிறது. இந்திய- வங்கதேச அணிகளின் வீரர்கள், சென்னையில் தனித்தனியே நட்சத்திர ஓட்டல்களில் தங்குகின்றனர். அதோடு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வலைபயிற்சியும் மேற்கொள்கின்றனர்.

The post வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangladesh ,India ,Dhaka ,Dinakaran ,
× RELATED இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை;...