×

ஐசிசிக்கு அறிக்கை அனுப்பும் போட்டி நடுவர் ஸ்ரீநாத்; நொய்டா மைதானத்துக்கு தடை?.. மலிவான ஒப்பந்தத்தால் சிக்கலில் ஆப்கானிஸ்தான்

நொய்டா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் உள்ள நொய்டா மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்டது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் நொய்டா பகுதியில் சில நாட்கள் மழை பெய்தது. அதனால், அந்த ஆடுகளம் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்தது. டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாட்கள் மழை பெய்யாத போதும், மைதானம்மோசமான நிலையில் இருந்ததால் போட்டியை நடத்த முடியவில்லை. அங்கு இருந்த மைதான ஊழியர்களால் தேங்கி இருந்த மழை நீரை வெளியேற்ற முடியவில்லை. 3வதுநாளானஇன்றுபோட்டியை தொடங்க முடியுமா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.

இந்நிலையில் மேட்ச் ரெப்ரீ யான ஜவகல் நாத், இந்த போட்டியின் முடிவில் மைதானத்தின் பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்டு பகுதி குறித்து அறிக்கை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புவார் என கூறப்படுகிறது. அவர் அறிக்கையில், பிட்ச் மற்றும் அவுட்பீல்டு பகுதிகள் சர்வதேச அளவிலான போட்டியை நடத்த தகுதியற்றவை என குறிப்பிட்டு இருந்தால் அந்த மைதானத்திற்கு 3 மதிப்பு இழப்பு புள்ளி வழங்கப்படும். ஒரு மைதானத்திற்கு 6 மதிப்பு இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டால் அந்த மைதானத்தில் அடுத்த 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டி நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த மைதானத்தில் போட்டியை ஏற்பாடு செய்த அணிக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

முதலில் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நடத்த கோரிக்கை வைத்தபோது பிசிசிஐ பெங்களூரூ, கான்பூர், நொய்டா என 3 மைதானங்களை சுட்டிக் காட்டி ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இதில் நொய்டா மைதானத்தை ஆப்கன் தேர்வு செய்துள்ளது. மலிவான ஒப்பந்தத்திற்கு மைதானத்தைப் பெற நினைத்த ஆப்கன் அணி, தற்போதுடெஸ்ட்டை முழுமையாக நடத்தி முடிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளது.

The post ஐசிசிக்கு அறிக்கை அனுப்பும் போட்டி நடுவர் ஸ்ரீநாத்; நொய்டா மைதானத்துக்கு தடை?.. மலிவான ஒப்பந்தத்தால் சிக்கலில் ஆப்கானிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Srinath ,ICC ,Noida Stadium ,Afghanistan ,Noida ,Afghanistan cricket team ,New Zealand ,India ,Dinakaran ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் 9வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை நாளை தொடக்கம்