துபாய்: இன்ஸ்டாகிராமில் கணவனை விவாகரத்து செய்த துபாய் இளவரசி டைவர்ஸ் என்ற பெயரில் புதிய வாசனை திரவியத்தை அறிமுகம் செய்து கவனத்தை பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது விவகாரத்தை அறிவித்து தனி கவனம் பெற்றவர் துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம். ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமி மகளான இவர், துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவரை திருமணம் செய்தார்.
இருவருக்கும் அழகான குழந்தை பிறந்த நிலையில், ஓராண்டுக்குள் இருவரது திருமண உறவு முடிவுக்கு வந்தது. இன்ஸ்டாகிராமில் தனது விவாகரத்து குறித்து பேசிய அவர், அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால் நான் விவகாரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு முன்னாள் மனைவி என கூறி, அதிரடி காட்டியிருந்தார். விவகாரத்தை அறிவித்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், டைவர்ஸ் என பெயரிட்டு வாசனை திரவியம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளார் இளவரசி. இளவரசியின் புதிய படைப்பு அவரது போலோவர்ஸ் இடையே சுவாரஸ்யத்தை ஏற்றியுள்ள நிலையில், இதன் விலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
The post “Divorce” பர்ஃப்யூம் அறிமுகம்.. விவாகரத்து செய்ததும் கணவனை வினோத முறையில் பழி வாங்கிய துபாய் இளவரசி..!! appeared first on Dinakaran.