×

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது.

* கமலா ஹாரிஸ்

நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்த திட்டங்கள் என்னிடமே உள்ளன. பணக்காரர்களுக்கு மட்டுமே டிரம்ப் வரிச்சலுகை கொடுத்தார். டிரம்ப் ஆட்சியில் இருந்து செல்லும் போது வேலைவாய்ப்பின்மை மோசமாக இருந்தது. டிரம்ப் ஆட்சியில் செய்த தவறுகளை சரிசெய்யவே 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. டிரம்பின் ப்ராஜக்ட் 2025 திட்டம் மிகவும் ஆபத்தானது. மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார்.

21ஆம் நூற்றாண்டிலும், அமெரிக்கா தான் முன்னிலையில் இருக்கும். சீன அதிபருக்கு நன்றி தெரிவித்து, டிரம்ப் டுவிட் செய்திருந்தார். டிரம்பால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. டிரம்பால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்க கூடாது. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூற கூடாது. பெண்களின் உடல் மீது அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. நெருக்கடியான இந்த காலகட்டத்தில், மக்களுக்கு சரியான தலைவர் தேவை. மக்களின் பிரச்சினைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார்.

* டிரம்ப்

சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் இங்குள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவை உலகின் சிறந்த பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். சீன பொருட்கள் மீது வரிகளை சுமத்தி அரசுக்கு வருவாய் ஈட்டினோம். எனக்கும் ப்ராஜக்ட் 2025 திட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கொரோனா பெருந்தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிகவும் குறைவாக இருந்தது. பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட், அவரிடம் எந்த திட்டமும் இல்லை.

மிக மோசமான குடியேற்ற கொள்கையால் அமெரிக்க பொருளாதாரம் கடும் பாதிப்பு. கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துகளை கூறியவர்கள் ஜனநாயக கட்சியினர். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். வங்கி கடன் ரத்து என மாணவர்களை பைடன் ஏமாற்றினார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது . செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. எனது பிரசார கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் 3ஆம் உலகப்போர் உருவாகும்

The post அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம் appeared first on Dinakaran.

Tags : US presidential election ,Kamala Harris ,Trump ,Washington ,Philadelphia, Pennsylvania ,US ,
× RELATED 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில்...