×

பல்லடம் ஒன்றிய திமுக சார்பில் கொடியேற்று விழா

 

பல்லடம், செப். 11: பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையத்தில் திமுக மின்சார தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் (எல்.பி.எப்.) கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதிதாக கொடி கம்பம் அமைக்கப்பட்டு கல்வெட்டு அமைக்கப்பட்டது.

இதனை பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திமுக தொழிற்சங்க கொடியேற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மின்சார வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், லோகநாதன், கருப்புசாமி, சையத் இம்ரான் மற்றும் பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆட்டோ குமார், பிரகாஷ், பாலகுமார், லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பல்லடம் ஒன்றிய திமுக சார்பில் கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : Union Government ,Palladium ,Dimuka Electric Workers Improvement Association ,L. B. F. ,Karunanidhi ,Palladium West Union ,Flag Raising Ceremony ,Union Council ,Dinakaran ,
× RELATED “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு