×

வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடு பொருட்களை கூகுள்பே மூலம் செலுத்த வசதி

 

திருப்பூர், செப். 11: திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு இடுபொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மை விரிவாக்க மையத்தில் விற்கப்படும் இடுபொருட்களை பணமில்லா பரிவர்த்தனையாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கூகுள் பே, வி-போன் பே மூலம் செலுத்தி விவசாயிகள் பெற்று பயன்பெறலாம். இடுபொருட்கள் குறித்த விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

The post வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடு பொருட்களை கூகுள்பே மூலம் செலுத்த வசதி appeared first on Dinakaran.

Tags : Agriculture Extension Center ,Tirupur ,Department of Agriculture ,Google ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர்