×

(தி.மலை) பட்டா வழங்கியதை கண்டித்து மறியல் போராட்டம் வந்தவாசி அருகே பரபரப்பு கோயிலுக்கு செல்லும் பாதையில்

 

வந்தவாசி, செப். 11: வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தில் அரசின் இலவச வீடு கட்டுவதற்காக தாலுகா அலுவலக மூலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட இடம் அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழி என்பதால் அந்த இடத்தினை அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்த வேண்டி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சரத்குமார் என்பவர் பலமுறை புகார் செய்தும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று திடீரென அங்குள்ள செல்போன் அவர் மீது ஏரி போராட்டம் மேற்கொண்டார். தகவல் அறிந்த பொன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

சமரசத்தை ஏற்காத நிலையில் கிராம பொதுமக்கள் வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கண்டவரட்டி செல்லும் சாலை அருகே மறியல் போராட்டம் மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பொன்னுசாமி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தில் கோயிலுக்கு செல்ல பாதையில் வீட்டுமனை பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

The post (தி.மலை) பட்டா வழங்கியதை கண்டித்து மறியல் போராட்டம் வந்தவாசி அருகே பரபரப்பு கோயிலுக்கு செல்லும் பாதையில் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Senshu temple ,Vandavasi ,Patta ,Kuttampattu ,Mariamman temple ,Th. Malai ,Samsonru temple ,
× RELATED ₹5 ஆயிரம் அபராதம் செலுத்த முன்வராததால்...