×

பரமத்திவேலூரில் ₹43 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

 

பரமத்திவேலூர், செப்.11: பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1960 கிலோ தேங்காய்யை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ₹33.29க்கும், குறைந்த பட்சமாக ₹29.29க்கும், சராசரியாக ₹32.09க்கும் ஏலம் போனது. ஆகமொத்தம் ₹45245க்கு வர்த்தகம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு 1845 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌₹31.29க்கும், குறைந்தபட்சமாக ₹27.29க்கும், சராசரியாக ₹29.79க்கும் ஏலம் போனது. ஆகமொத்தம் ₹43,458க்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பரமத்திவேலூரில் ₹43 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Paramathivellore ,Paramathivelur ,Dinakaran ,
× RELATED ₹80 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்