×

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார்.

இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அதிமுக என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார். இதில் கலந்துகொள்வதா, இல்லையா என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

The post மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Former Minister ,Jayakumar ,CHENNAI ,Liberation Tigers Party ,Thirumavalavan ,minister ,
× RELATED தலைவர்களின் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை