×

நாடாளுமன்ற காங். பொருளாளராக விஜய்வசந்த் எம்பி நியமனம்

புதுடெல்லி: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக விஜய்வசந்த் எம்பியை நியமித்து சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி நேற்று கட்சியின் நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் பொருளாளர் ஆகியோரை நியமித்தார்.

ரஞ்சித் ரஞ்சன் மாநிலங்களவை செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், எம்.கே. ராகவன் மற்றும் அமர் சிங் ஆகியோர் மக்களவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக தமிழ்நாட்டை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

The post நாடாளுமன்ற காங். பொருளாளராக விஜய்வசந்த் எம்பி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Parliamentary Cong ,Vijayvasant ,New Delhi ,Sonia Gandhi ,Parliamentary Congress Party ,Congress Parliamentary Committee ,President ,Parliamentary Secretaries ,Ranjith Ranjan ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...