×

மாணவி கூட்டு பலாத்காரம் போக்சோவில் காதலன் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த 18 வயதான மாணவி. புள்ளம்பாடி விடுதியில் தங்கி அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார். லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). இவர் திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்துள்ளார். கடந்த ஏப்ரல் 13ம்தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மாணவியை, சமயபுரம் டோல்கேட் அருகே மாருதி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்று கூல்டிரிங்சில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிரம்பலரசன் மற்றும் அவரது நண்பர்கள் 4பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து, நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

வெளியே சொன்னால் இணையதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என காதலன் மிரட்டியுள்ளார். இந்நிலையில், மாணவியின் உடலில் மாற்றம் தெரிந்து கடந்த மாதம் 31ம்தேதி தாய் விசாரித்ததில் மாணவி நடந்த விஷயத்தையும், மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்படி லால்குடி மகளிர் போலீசார் வழக்குபதிந்து, காதலன் சிலம்பரசனை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும்
4 பேரை தேடி வருகின்றனர்.

 

The post மாணவி கூட்டு பலாத்காரம் போக்சோவில் காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Poxo ,Trichy ,Lalgudi, Trichchi district ,Dhampadi Hotel ,Government IDI ,Silambarasan ,Sirumarathur ,Lalkudi ,Boxo ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த...