×

அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: சேவலை எடுத்துச் சென்றதற்காக அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாத்துறையை சேர்ந்த முனியாண்டி என்பவரை அவரது தம்பி சந்தோஷ் குமார் கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சந்தோஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2020ம் ஆண்டு சத்தோஷ்குமாருக்கு தெரியாமல் அண்ணன் முனியாண்டி சேவலை தூக்கிச் சென்றதால் மோதல் ஏற்பட்டது. மோதலின்போது அண்ணன் முனியாண்டியை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் தம்பி சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

The post அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Muniandi ,Ambatura ,Santhosh Kumar ,Dindigul District ,Principal Session ,
× RELATED இப்போதும் நாங்கள் எதிரி தான் 15...