×

நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்


நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டு பன்றி உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் கரடிகள் அவ்வபோது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரத்திலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக, அகஸ்தியர்புரம், அனவன் குடியிருப்பு, விகேபுரம், சிவந்திபுரம், கோட்டைவிளைபட்டி ஆகிய பகுதிகளில் கரடிகள் ஜோடியாகவும், தனித்தனியாகவும் இரவு நேரங்களில் உலா வருகிறது. விகேபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றித் திரிகின்றன. பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கியிருக்கும் கரடிகள் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகிறது.

இந்த கரடிகளை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கரடிகள் கூண்டில் சிக்காமல் ஹாயாக உலா வருகிறது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கோட்டைவிளைப்பட்டி சுடலைமாடன் கோவில் பகுதியில் சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் வீட்டின் அருகே கரடி சுற்றி திரிந்தது. இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். விகேபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கரடிகள் அடிக்கடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

The post நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Papanasam ,Dinakaran ,
× RELATED தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை...