×

திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் பிரச்னைகளை தீர்க்க காவல்துறை எப்போதும் தயாராக உள்ளது

*குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் எஸ்பி பேச்சு

திருப்பதி : மக்கள் பிரச்னைகளை தீர்க்க காவல்துறை எப்போதும் தாயாராக உள்ளது என்று திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் எஸ்பி சுப்பாராயுடு பேசினார்.
திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 76 புகார் மனுக்களை எஸ்பி சுப்பா ராயுடுவிடம் வழங்கினர். இந்த புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட எஸ்பி வழக்கு விவரங்களை மனுதாரர்களிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் புகார் மனு அளிக்க எஸ்பி அலுவலகத்திற்கு வர முடியாதவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பெண்களின் புகார்களுக்கு முன்னுரிமை அளித்து, விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி வெங்கடராவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் பிரச்னைகளை தீர்க்க காவல்துறை எப்போதும் தயாராக உள்ளது appeared first on Dinakaran.

Tags : Tirupati SP ,Tirupati ,SP ,Subbarayudu ,Dinakaran ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்