×

தஞ்சாவூரில் மகளிர் சுயஉதவிகுழுக்களை சேர்ந்த 14,354 உறுப்பினர்களுக்கு ₹106.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி

*அரசு தலைமை கொறடா வழங்கினார்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் 1121 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 14,354 உறுப்பினர்களுக்கு ரூ.106.26 கோடி நலத் திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கியதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் கரிகாலச் சோழ கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் , தஞ்சாவூர் எம்பி முரசொலி , எம்எல்ஏக்கள் டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 14,354 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.106.26 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அரசு தலைமைக் கொறடா கோவி.

செழியன் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதல்வரின் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கியதைத் தொடர்ந்து. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,121 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 14,354 உறுப்பினர்களுக்கு ரூ.106.26 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய இரண்டு திட்டங்களை தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 15,568 மகளிர் சுய உதவிக் குழுக்களும், நகரப்பகுதியில் 4,412 மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஆக கூடுதல் 19,980 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 2,39,760 சுய உதவி குழு உறுப்பினர்கள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024 ம் ஆண்டு ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் 26,100 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.1481.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டதில் 21,483 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.1,481.00 கோடியும், சுழல் நிதி 142 சுய உதவிக்குழுக்ளுக்கு 21.15 லட்சமும், சமுதாய முதலீட்டு நிதி 336 சுய உதவிக்குழுக்ளுக்கு 504.00 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டு ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் 17,762 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.1,383.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டதில் தற்போது வரை 7966 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.599.93 கோடி இலக்கீடு அடைய பெற்றுள்ளது.அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வங்கி நேரடி கடனாக 1042 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12,452 உறுப்பினர்களுக்கு ரூ.92.76 கோடியும், 21 ஊராட்சி/பகுதி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ.13.12 கோடி மதிப்பிலான வங்கி பெருங்கடனும், 14 சுய உதவிக்குழுக்களுக்கு 21.00 லட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதியும், 14 சுய உதவிக்குழுக்களுக்கு 2.00 லட்சம் மதிப்பிலான சுழல் நிதியும். 20 தொழில் செய்யும் தனிநபர்களுக்கு 10.00 லட்சம் மதிப்பிலான ஓரிட சேவை மைய நிதியும்.

10 தொழில் செய்யும் தனிநபர்களுக்கு 5.00 லட்சம் மதிப்பிலான வட்டார சேவை மைய நிதியும் ஆக கூடுதல் 1121 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 14,354 உறுப்பினர்களுக்கு ரூ.106.26 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமைக் கொறடா முனைவர்.கோவி.செழியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சாந்தி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் மார்ட்டின் ஆரோக்கியசாமி, அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், வங்கி அலுவலர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் மகளிர் சுயஉதவிகுழுக்களை சேர்ந்த 14,354 உறுப்பினர்களுக்கு ₹106.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Women Self Help Groups ,Thanjavur ,Minister ,Youth Welfare and Sports Development ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில்...