×

தங்கம் விலையில் தொடர்ந்து 3வது நாளாக மாற்றமில்லை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,440க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி சவரனுக்கு ரூ.53,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.6,680க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.91-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.

சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களும் தங்கம் ஒரே விலையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம். இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.91.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் விலையில் தொடர்ந்து 3வது நாளாக மாற்றமில்லை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,440க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...