×

திருப்பூர் பஸ் நிலையத்தில் சுகாதார பணிகள் தீவிரம்

 

திருப்பூர், செப். 10: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் கலைஞர் மத்திய பஸ் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள்.இதனால், நோய்கள் பரவுவதை தடுக்க பஸ் நிலையத்தில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகிறது.

The post திருப்பூர் பஸ் நிலையத்தில் சுகாதார பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tirupur Bus Station ,Tirupur ,Tirupur Corporation ,bus ,station ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தினர் 6 பேர் திருப்பூரில் கைது..!!