×

468 மனுக்கள் குவிந்தன

 

நாமக்கல், செப்.10: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 468 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் எலந்தக்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் வெள்ளபிள்ளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட 3 அரசு பள்ளி சத்துணவு மைங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் இரண்டாமாண்டு பயின்று வரும் மோகனூர் குட்லாம்பாறையை சேர்ந்த மாணவன் அபினேஷ்க்கு முதலமைச்சரின் உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், ₹50 ஆயிரம்- உதவித்தொகையும், கூட்டுறவு துறை சார்பில் 10 பேருக்கு ₹11.13 லட்சம் மதிப்பில் பயிர் கடனும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், உதவித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 468 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Collector ,Collector ,Uma ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...