×

பேராசிரியர் செல்லப்பன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பேராசிரியர் கா.செல்லப்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஆங்கில பெரும் பேராசிரியரும், தலைசிறந்த மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் கா.செல்லப்பன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்னாரது மறைவு தமிழ், ஆங்கில இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

தமிழ்நாட்டில் முதன் முறையாக இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு ஆங்கில கவிஞர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய நாட்டு கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். கலைஞரின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதில் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறப்புக்கும், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெரும் சிறப்புக்கும் உரியவராவார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post பேராசிரியர் செல்லப்பன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Prof. ,Chellappan ,Chennai ,M.K.Stalin ,K. Chellappan ,Annaratu ,CM ,M.K.Stal ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...