சிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிலோன் சாலை அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 17ம் தேதி காலை சங்கல்பம் - கும்ப பூஜை - கணபதி ஹோமம் - ஸ்ரீ செண்பக விநாயகப் பெருமானுக்கு வாசனாதித் திரவியங்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் ஸ்ரீ செண்பக விநாயகப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக தங்கத் தும்பிக்கையுடன் திருவீதி உலா வந்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

× RELATED துபாயில் தமிழக எப்.எம்...