×

தோட்டத்தில் வேலை செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பா.ஜ. நிர்வாகிக்கு போலீஸ் வலை


நெல்லை: தோட்டத்தில் வேலை செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). பா.ஜ. நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரான இவர் விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு அதைப் பறித்து சந்தைக்கு அனுப்புவார். காய்கறிகளை பறிக்க அதே பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் தினசரி கூலி அடிப்படையில் அவரது தோட்டத்திற்கு வேலைக்குச் செல்வார்கள்.

இந்த நிலையில் அவரது தோட்டத்தில் வெண்டைக்காய் நன்கு காய்த்து விற்பனைக்கு தயாராக இருந்தது. இதனால் செல்வகுமார் வெண்டைக்காய்களை பறிக்க அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை வேலைக்கு அழைத்துள்ளார். இதன் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (35) என்பவரும், சமீபத்தில் செல்வகுமாரின் காய்கறி தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கச் சென்றார். சக விவசாய தொழிலாளர்களுடன் சரஸ்வதி வெண்டைக்காய் பறிப்பதை பார்த்த செல்வகுமார் அவரை அழைத்துள்ளார். முதலாளி கூப்பிடுகிறாரே என்ற அடிப்படையில் சரஸ்வதி அங்கு சென்றுள்ளார்.

அப்போது சரஸ்வதியிடம் செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து அவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ராதாபுரம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யச் சென்றனர். ஆனால் செல்வகுமார் போலீசார் வருவதை அறிந்து தலைமறைவானார். வெண்டைக்காய் பறிக்கச் சென்ற பெண்ணிடம் அத்துமீற முயன்ற பாஜ நிர்வாகியால் ராதாபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தோட்டத்தில் வேலை செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பா.ஜ. நிர்வாகிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Pa. J. Police ,Nella ,Southern District Economic Division ,Baja ,Selvakumar ,South Kumpilambadu ,Nella District Radhapuram ,Pa. J. Rice ,Dinakaran ,
× RELATED நெல்லை, குமரி மாவட்டங்களில் தொழிலக...