×

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கான்-நியூசி பலப்பரீட்சை

நொய்டா: ஆப்கான் அணி டி20, ஒருநாள் போட்டிகளில் கவனிக்க தக்க அணியாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இனனும் பெரிய அளவில் பேசப்படாத அணியாகவும், அதிகம் விளையாடாத அணியாகவும் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக 2018ம் ஆண்டு டெஸட் அரங்கில் அறிமுகமான ஆப்கான் இதுவரை 9 டெஸ்ட்களில் விளையாடி உள்ளது. வெளிநாடுகளில் சென்று டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி இருந்தாலும், சொந்த மண்ணில் இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடியதில்லை.

ஆப்கானில் நிலவும் அச்சமூட்டும் சூழல் காரணமாக எந்த நாடும் அங்கு சென்று விளையாட விரும்புவதில்லை. அதனால் ஆப்கானில் நடைபெற வேண்டிய ஆட்டங்கள் இந்தியா மற்றும் அமீரகத்தில் மட்டுமே நடக்கின்றன. அப்படி ஆப்கானுக்கு எதிராக, ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாட நியூசிலாந்து வந்துள்ளது. அந்த டெஸ்ட் கிரேட்டர் நொய்டாவில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இந்த 2 அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஹசமத்துல்லா ஷாகிதி தலைமையில் ஆப்கான் கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்த 2வது டெஸ்ட்டில் வெற்றிக்கு வரிந்துக் கட்டுவார். ஆனால் அனுபவ அணியான நியூசியை எதிர்த்து இக்ரம், ஜியாவூர், ரகமத் , ரியாஸ் உள்ளிட்ட வீரர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும்.

முகமது நபி, ரஷீத்கான் உட்பட முன்னணி வீரர்கள் இல்லாதது அணிக்கு பின்னடைவுதான். அதே நேரத்தில் டிம் சவுத்தீ தலைமையிலான நியூசி அணியில் கேன் வில்லியம்சன், சான்டனர், கிளென் பிலிப்ஸ், லாதம், டெவன் கான்வே, அஜாஸ், ரச்சின், மேட் ஹென்றி என அனுபவ அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமில்லை. அதனால் நியூசி சவாலை சமாளிக்க ஆப்கான் போராட வேண்டி இருக்கும்.

The post டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கான்-நியூசி பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Noida ,T20 ,Afghanistan ,Test ,India ,Dinakaran ,
× RELATED நொய்டாவில் பரபரப்பு: கார் மோதியதில்...