×

கிளப் த்ரோ போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

பாராலிம்பிக்கில் ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. பாராலிம்பிக்கில் ஆடவர் கிளப் த்ரோ போட்டியில் இந்திய வீரர் தராம்பீர் தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தராம்பீர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். ஆடவர் கிளப் த்ரோ போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா 2-வது இடம்பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கத்தை வென்றார். கடந்தாண்டு நடந்த ஆசியப்போட்டியில் கிளப் த்ரோ பிரிவில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும் வென்றனர். பாராலிம்பிக்கில் 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 13 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது.

The post கிளப் த்ரோ போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Paralympics ,Dharambir ,Dinakaran ,
× RELATED பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு...